ezhumbi vaa nee எழும்பி வா நீ…
எழும்பி வா நீ…
என் பிரியமே என் ரூபவதியே
சாம்பலை சிங்காரமாக்கி
புலம்பலை ஆனந்தமாக்குவேன்
1. உடைந்து போன கனவால்
உந்தன் வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
விழுந்துபோன தருணங்கள் நினைத்து
நம்பிக்கை இழந்தாயோ?
பருவங்கள் மாற்றுவேன்
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
கனி தரும் விருட்சமாய்
உன்னை விருத்தியாக்குவேன்
2. சிறகையிழந்த கழுகைப்போல
உன் மனம் கலங்குதோ?
சிதறிப்போன சிலரை நினைத்து
சிதைந்து நீ போனாயோ?
சிறுமை பொறுத்தால்
புது சிறகுகள் பார்ப்பாய்
சிறகை விரித்தால்
பெரும் சிகரங்கள் காண்பாய்
Arise, my dear my darling, my beautiful one I will turn your ashes to beauty your lament to rejoicing 1. Does your broken dreams make your life bitter? are you losing your hope thinking of your missed opportunities? I will change your season I will make you elegant a fruit bearing tree I will make you flourish 2. Like an eagle that has lost its wings, Is your heart troubled? are you shattered thinking of people who left you? If patient and humble new wings you shall witness open up your newly grown wings you shall reach mountain cliffs