• waytochurch.com logo
Song # 28303

என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

Enna Ennaku Illamal Poonallum


Enna Enakku Illamal Poonalum


என்ன எனக்கு இல்லாமல் போனாலும்
உம் கிருபை எனக்கு போதுமைய்யா
அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் போனாலும்
உம் மகிமை எனக்கு போதுமைய்யா
என் இயேசு நாதா
உம் மகிமை எனக்கு போதுமைய்யா


சுற்றத்தாரும் உற்றத்தாரும் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே
தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
உள்ளகையில் என்னை வரைந்தீரே
உம் மகனாக மாற்றி விட்டீரே


சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியாக கிடைக்கும்
உம்மை நம்பினோருக்கு குறைவுமில்லையே
எளியவனை நீர் மறப்பதில்லை
நம்பினோரை கைவிடுவதில்லை
அவன் உம்மை விட்டு விலகுவதில்லை


உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும்
அன்பை என்னில் பிரிப்பதில்லையே
மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும்
நீரின்றி எவரும் இல்லையே
உம் துணை இன்றி வாழ்வு இல்லையே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com