என் வேலையாய் யார்
En Velayaai Yaar
En Velayaai Yaar
என் வேலையாய் யார் போவார் என்ற
சத்தம் உன் காதில் கேட்கலையோ
தம் ஜீவன் தந்த இயேசுவின் அன்பை
அறிவிக்க உனக்கு மனமில்லையோ 
வலக்கைக்கும் இடக்கைக்கும்
வித்தியாசம் தெரியாமல்
வாழ்ந்திடும் ஜனங்கள் கோடியுண்டு
வழி தெரியாமல்
மாண்டிடும் மாந்தரை
மீட்டிடும் நற்செய்தி
உன் கையில் உண்டு 
உனக்காய் மரித்த
இயேசுவின் அன்பை
உனக்குள்ளே மறைப்பது ஞாயமில்லை
நீ கண்ட இரட்சிப்பை
உன் தேசம் கண்டிட
இன்றே எழும்பிடு வாலிபனே 
வாழ்கின்ற வாழ்க்கையின்
பலனை அறிந்திடும்
நியாயத்தீர்பொன்று நமக்கு உண்டு
உயிர் வாழும் நாளெல்லாம்
அவர் சித்தம் செய்து
அலங்கரிப்போம் நம் கிரீடங்களை

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter