• waytochurch.com logo
Song # 28321

en kelvikellam bathil என் கேள்விக்கெல்லாம் பதில்


En Kelvikellam Bathil
என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
என் வாழ்வெல்லாம் துணை நீங்கதானப்பா
இரட்சகரே என் இயேசு ராஜா
என் தேவையெல்லாம் நீங்க தானே


1. சிங்கத்தின் வாயில் நான் இருக்கின்றேன்
சீறிடும் புயலில் நான் தவிக்கின்றேன்
அற்புதம் செய்திடுங்க கை
தூக்கி எடுத்திடுங்க


2. செத்தவனை போல் நான் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரத்தை போலானேன்
என் விளக்கை ஏற்றிடுங்க
பிரமிக்க செய்திடுங்க


3. புலம்பலை களிப்பாக மாற்றினீரே
மகிமை அமர்த்திடாமல் உயர்த்தினீரே
உயிருள்ள நாளெல்லாம் கீர்த்தனம் பண்ணிடுவேன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com