en ovvoru sottu kanneerukkum என் ஒவ்வொரு சொட்டு
En Ovvoru Sottu Kanneerukkum
என் ஒவ்வொரு சொட்டு
கண்ணீருக்கும் பதிலுண்டு
அதை பெற்று, பெற்று
அனுபவிக்க பெலனுண்டு
நான் திடன் கொள்வேன்,
நான் பெலன் கொள்வேன்
என் புலம்பலை ஆனந்த
களிப்பாய் மாற்றிடுவார்
1. கண்ணீரின் பாதையில்
நடக்கும்போதெல்லாம்
என் கண்ணீரைக் காண்பாரோ
என்று யோசித்தேன்
ஆனால் உள்ளங்கையில் என்னை
வரைந்து வைத்துள்ள கர்த்தர்
உன் கண்ணீரை காண்கிறேன்
என்று சொன்னாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)
2. சோதனையில் சோர்ந்து போய்
அமிழ்ந்து போகையில்
எல்லாமே முடிந்ததோ என்று யோசித்தேன்
ஆனால் அமிழ்ந்த பேதுரு கரம்
பிடித்து தூக்கின கர்த்தர்
என்னையும் தம் கரம் பிடித்து
தூக்கி விட்டாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)
3. தீமையான காரியங்கள்
சூழ்ந்து கொள்கையில்
தேவன் என்னை மறந்தாரோ
என்று யோசித்தேன்
ஆனால் யோசேப்பை ராஜாவாக
மாற்றின கர்த்தர்
எல்லா தீமைகளையும்
நன்மையாக முடியச்செய்தாரே
(என் ஒவ்வொரு சொட்டு ..)