en aathumaave nee kartharaiye thuthi என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி
என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி
முழு உள்ளத்தோடு
என் ஆத்துமாவே நீ கர்த்தரையே துதி
முழு இதயத்தோடு
இந்நாள் வரை உன்னை ஆதரித்த,
இந்நாள் வரை உன் மேல் அன்பு வைத்த – உன்
ஆண்டவரையே நீ தொழுதேற்று
உந்தன் உள்ளத்தின் ஆழம்தனை ஆராய்ந்து அறிந்தவர் அவரே
உள்ளங்-கைகளில் வரைந்து உன்னை பாதுகாப்பவர் அவரே
அவர் சமூகமே ஆனந்தமே
பிரசன்னம் பேரின்பமே
எல்லை எங்கும் சமாதானமே என்றும்(என்றென்றும் ) தருபவர் அவரே
எல்லை இல்லா சந்தோஷமே எந்நாளும் தருபவர் அவரே(2)
அவர் சமூகமே ஆனந்தமே
பிரசன்னம் பேரின்பமே
தாழ்மையிலே நினைத்து உன்னை உயர்த்தி வைத்தவர் அவரே
கிருபையினால் நிறைத்து உன்னை ஆசிர்வதிப்பவர் அவரே
அவர் சமூகமே ஆனந்தமே
பிரசன்னம் பேரின்பமே