என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல்
En Aasthibaram Yesuvin Mel
En Aasthibaram Yesuvin Mel
என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்
அசைவதில்லை நான் அசைவதில்லை
அல்லேலூயா ஆனந்தமே
இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்
1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்
போஷித்த காகங்கள் பறந்து போகலாம்
யோர்தானின் கரைகள் தாண்டி போனபின்
வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம்
கவலையில்லை கலக்கமில்லை
கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை
2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம்
சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்
ஆரோனும் மீரியாமும் எழும்பி எதிர்க்கலாம்
கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம்
3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போகலாம்
பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம்
சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள்
சீமோனைப்போல் சிலர் மாறிபோகலாம்