எந்தன் ராக தலைவனே
Enthan Raaga Thalaivanae
Enthan Raaga Thalaivanae
எந்தன் ராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…
என் நேசர் அழகு … என் ராஜா அழகு …
வெண்மையும் சிவப்புமானவரே
பதினாயிருங்களும் போற்றும் பரிசுத்தரே
மண்ணான எந்தன் துதியை நீர் விரும்புகிறீர்
வானம் உம் சிங்காசனமும்
பூமி உம் பாதபடி
ஆளுகை செய்திடும் தேவனே
நீதி நியாயம் செய்திடும் நியாயாதிபதியே
ஒன்றுக்கும் உதவா என்னையும் நீர்தெரிந்தெடுத்தீர்
ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதே நீர் செய்த நன்மையை சொல்லவே
பல நன்மைகள் செய்திடும் நல்லவரே
பாவியான என்னையும் நீர் நேசித்தீரே
எந்தன் ராக தலைவனே…
எந்தன் சங்கீத தலைவனே…
உம்மை நினைத்து நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா…

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter