uyire uyire enthan உயிரே உயிரே எந்தன்
Uyire Uyire Enthan
உயிரே உயிரே
எந்தன் உயிரானீரே
தினமும் தினமும்
எந்தன் நினைவானீரே
என்னை தேடி வந்து தேற்றின தென்றல்
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது
என்னை மறவாதது
ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்புக்கு அணை இல்லயே
அது குறையாதது
என்றும் நிறைவானது -உயிரே
பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது
என்றும் செழிப்பானது -உயிரே
நீரன்றி வாழ்வில்லை
உம் நினைவின்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா
எனக்கு வேண்டும் தேவா -உயிரே