உன்னதத்தை நோக்கும் பாதை
Unnadhathai Nokkum Padhai
Unnadhathai Nokkum Padhai
உன்னதத்தை நோக்கும் பாதை இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம் இழுத்து கொள்கின்றார்.
எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் இயேசு நாமத்திலே
ஆண்டவர் என்னோடிருந்து என்னை அதரித்தார்
ஆவி ஆத்துமா தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன் – உன்னதத்தை
என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் இயேசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
ஓடுகின்றேன் பொறுமையோடு இயேசுவை நோக்கி
ஜீவ கிரீடம் சூடிடுவேன் தேவ சந்நிதியில் – உன்னதத்தை

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter