உடைந்து போன பாத்திரம் நான்
Udainthu Poona Paathiram Naan
Udainthu Poona Paathiram Naan
உடைந்து போன பாத்திரம் நான்
காயங்களோடு நிட்கின்றேனே
நீரில்லா உலகில் யாருண்டு ?
என்னை ஆற்றிட தேற்றிட யாருண்டு ?
மாமிச எண்ணங்கள் ஈரத்ததால்
உம் கிருபை அன்பை இழந்தேனே
இன்று என் குறைகளை உணர்ந்துள்ளேன்
தயவாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
இரவு முழுதும் அழுகின்றேன்
செய்த தவறை உணர்ந்துள்ளேன்
உன் பெலத்தால் என்னை இடைக்கட்டும் பாதை நடக்க தயை செய்யும் .
வியாதியின் பயங்கள் மேற்கொள்ளுதே
மரண இருளோ ஆட்கொள்ளுதே
வேதத்தில் காணும் அற்புதங்கள்
என் ஜெபம் மூலமும் நடக்குமோ?
என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் என்பேன்
நிச்சயம் சாட்சியாய் வாழுவேன்
உம் , அன்பின் சின்னமாய் மாறுவேன்
முயற்சி தோல்வியில் முடிந்தாத்தால்
கணுவுகள் எல்லாம் கலைந்ததால்
உறவுகள் என்னை வெறுத்ததே
தனிமையில் நான் நிட்கின்றேனே
சோர்ந்து போய் நான் அழுகின்றேன்
பெலன் இல்லாமல் தவிக்கின்றேன்
நான் எதிர்பார்க்கும் முடிவை நீர்
என்னக்காய் துவங்கி வைப்பீரே.

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter