உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து
Unga Vethathode Paathathilae Vilunthu
Unga Vethathode Paathathilae Vilunthu
உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா (2)
என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே (2)
அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா (2)
நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே (2)
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே (2) – உங்க வேதத்தோட
என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே (2)
நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே(2)
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே (2) – உங்க வேதத்தோட
யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா (2)
நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே (2)
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே (2) – உங்க வேதத்தோட

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter