irul soolnthidum paathaigalil இருள் சூழ்ந்திடும் பாதைகளில்
Irul Soolnthidum Paathaigalil
இருள் சூழ்ந்திடும் பாதைகளில்
மனம் நொறுங்கிடும் வேளைகளில்
அருகில் வருவார் கிருபை தருவார்
யாருமில்லை இவர்போல் ஒருவர்
1. எல்லா பாரங்களும் சுமப்பார்
என்றும் தாங்கியே நடத்திடுவார்
கர்த்தர் தம் கரத்தால் கண்ணீரை துடைப்பார்
காத்து நடத்துவார் என்னை நித்தம் (2)
2. எத்தனை நல்லவர் என் இயேசு
இவ்வுலகில் ருசித்தறிவேன்
இதை அறிந்ததினால் கடைசி வரையில்
இனி எனக்கென்றும் நீர் போதுமே (2)
3. எந்தன் அடைக்கலமும் பெலனும்
எனக்கேற்ற எந்தன் துணையும்
எந்த ஆபத்திலும் எந்த நேரத்திலும்
எனகென்றும் துணை அவரே (2) (…அருகில் வருவார்)