• waytochurch.com logo
Song # 28375

இருக்கின்றவராய் இருப்பவரே


இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் என்றும் மாறாதவர்
இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே
இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே


இயேசைய்யா நீர் எழும்பிடுவீர்
எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர்
உம்மை தடுப்பவர் எவருமில்ல
உன்னதரே நீர் பெரியவரே


வாழ வைப்பேன் என்றவர்கள்
வெறுமையாய் என்னை அனுப்பினாலும்
வாக்குரைத்த வல்லவரே
வறட்சியில் வழி திறந்தீரே
வாழ்வை அலட்சியம் செய்தவர்கள்
வியந்து பார்க்க உயர்த்தினீரே


வாழ முடியாத நிலைகளிலும்
வாழ வைக்கும் வள்ளல் நீரே
வீணாக நாட்கள் கடந்திட்டாலும் விண்ணவர் வார்த்தை புடமிட்டதே
வருத்தம் யாவும் மறக்கச் செய்து
வலுவாய் பெருகச் செய்தவரே


நீதியின் தேவன் பார்ப்பீரே
நியாயத்தை என்றும் விசாரிப்பீரே
நம்பிக்கையெல்லாம் அகன்றாலும் நம்பிக்கைக்குரியவர் நடத்துவீரே
நித்தியமான ஆசீகளால்
நிறைத்து நிலைக்கச் செய்வீரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com