இரத்த சாட்சிக் கூட்டம்
Iratha Satchi Kootam
Iratha Satchi Kootam
இரத்த சாட்சிக் கூட்டம் சத்திய பாதையில்
நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்
ஜீவன் சுகம் பெலன் யாவையும் ஈந்ததால்
சுத்த சுவிசேஷம் ஓங்குதே
1. ஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட
ஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட
கல்வாரியில் மரித்தே உயித்தெழுந்த
கர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் போர்வீரரே
3. நாடு, நகரமோ, காடு மலையோ நாடித் தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்
மாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி
கண்டறிந்த சாட்சி கூறுவோம் – போர்வீரரே
4. தாகமோ, பசியோ நோக்கிடாமலே லோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே
முன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே
இன்னமும் முன்னேறி சேவிப்போம் போர்வீரரே
5. உன்னத அழைப்பை என்றும் காத்திட ஊக்கமாய் உறுதியாய் தகுதி
பெற்றிட ஆவியிலே அனலாய் நிலை நின்றிட ஆண்டவர் அருள் பொழிகுவார் போர்வீரரே
6. சுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்
சத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்
வாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்
வல்ல விசுவாச சேவையில் – போர்வீரரே
7. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே –
நாம்
ஆதிப்பிதாக்களுடன் ரத்த சாட்சிகள்
ஆர்ப்பரித்துக் கூடி வாழுவோம் போர்வீரரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter