• waytochurch.com logo
Song # 28380

yesuve ennakiragidume இயேசுவே எனக்கிறங்கிடுமே


Yesuve Ennakiragidume
இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேழுமே
வடியும் எந்தன் கண்ணீர் துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2


அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கி எடுத்தார் – 2
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார் – 2


1. எந்தன் வீட்டில் உம் பாதபடி
சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே
முடிந்தது என்று நகைத்தனரே
ஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 (…அவரே)


2. அந்த தாயின் அன்பை மறந்தேன்
பாவத்தால் உம் பெலன் இழந்தேன்
இப்போதும் உந்தன் ஆவி ஊற்ற
ஒருமுறை என்னை நினைத்திடுமே – 2 (…அவரே)

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com