• waytochurch.com logo
Song # 28381

yesuvin nesathal en இயேசுவின் நேசத்தால் என்


Yesuvin Nesathal En


இயேசுவின் நேசத்தால் என் உள்ளம் பொங்குதே
அவ்வன்பின் மாட்சிமை அறிவுக் கெட்டுமோ


அனுபல்லவி
=========
ஆ! என்ன ஆழமே இயேசுவின் நேசமே
அதன் தியானமே ஜீவிய பாக்கியமே


சரணங்கள்
========
1. லோகமுண்டாகுமுன் என்னையும் கண்டாரே
லோகத்தில் வந்து தன் ஜீவனைத் தந்தாரே
உன்னத அழைப்பால் தன்னோடு தங்கிட
என்னைத் தகுதியாய் எண்ணிய நேசமே – இயேசுவின்


2. சீயோனில் எனக்காய் மூலைக்கல்லாகியே
சீயோனில் என்னையும் சேர்த்தொன்றாய் கட்டியே
மேலோக நாதரின் வேலையை முடித்த
மேலான சிற்பியாம் ஏசுவின் நேசமே – இயேசுவின்


3. உன்னத அன்பென்னும் ஒப்பற்ற ஈவினால்
தன்னைப்போல் என்னையும் தெய்வீகமாக்குவார்
சத்துருவா மெனைத் தம் சொந்தமாக்கிய
உத்தமர் ஏசுவின் உன்னத நேசமே – இயேசுவின்


4. மணவாளன் இயேசுவின் மங்கள நாளதில்
மணவாட்டி கூட்டத்தில் மாபாவி சேர்ந்திட
கொடிய பாடுகள் குரூர யூதரால்
காரணமின்றியே சகித்த நேசமே – இயேசுவின்


5. ஜீவ கிரீடமும் ஜோதியாம் அங்கியும்
நீதியின் செங்கோலும் தரித்து வாழ்ந்திட
முள்முடி அணிந்து நிந்தையும் சகித்த
மன்னாதி மன்னனின் மாறாத நேசமே – இயேசுவே


6. மீட்பின் சங்கீதங்கள் சீயோனில் பாடுவேன்
மேலோக தூதரும் அப்பாடல் பாடிடார்
கலவாரிக் குன்றின்மேல் கை காலறையுண்ட
கர்த்தாதி கர்த்தரின் காதல் என் கீதம் – இயேசுவின்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com