christhuvin sinthaiyai tharipoom இயேசுவின் சிந்தையை தரிப்போம்
Christhuvin Sinthaiyai Tharipoom
இயேசுவின் சிந்தையை தரிப்போம்
நேசமோடவர் அன்பில் சுகிப்போம்
சுத்த இதயத்தை சுதந்தரமாக்கி
நித்திய வாழ்வைதை நினைவதில் ஆக்கி
நித்திய வேதம் சர்வாயுதமாக்கி
கர்த்தரை பார்த்து நடப்போம்
கஷ்டங்கள் எல்லாம் கர்த்தருக்காக
நஷ்டம் என்றே உணராதவராக
கன மகிமை உண்டு பன்னுதட்காக
மன மடிவின்றி நடப்போம்
பொறுமை இல்லாதவர் முருமுறுத்தாலும்
உரிமை இல்லை என்று வெறுத்து விட்டாலும்
சிலுவையின் பாடுகள் சகித்தது போல
சினம் அடையாது நடப்போம்
கள்ள சகோதரர் கலக்கிடும் போது
சொல்லாதவைகளை சுமத்திடும் போது
அல்லலின் மேல் அல்லல் அணுகிடும் போது
சொல் தவறாமல் நடப்போம்.
பதிலுக்கு பதில் செய்யாமல் இருந்து
நிந்திப்பவர்காய் நிதமும் ஜெபித்து
சபித்திடும் சத்ருக்களை ஆசீர்வதித்து
பிதாவை போல் ஆக கடவோம்
மூல உபதேசங்களை கடந்து
உலகத்தின் வேஷத்தை மனமுகர்ந் தருத்து
நலமுடன் காண்பதை நாள்தோறும் உணர்ந்து
பூரணராக கடவோம்