yesuvin anbai vitu piripavan yaar இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
Yesuvin Anbai Vitu Piripavan Yaar
பல்லவி
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
பசியோ, துன்பமோ, துஷ்ட துர்குணமோ?
வியாகுலமோ, விரோதங்களோ?
மிஞ்சும் நாச மோசம், கொடும் பட்டயமோ?
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
சரணம் 1
நிகழ் காரியமோ, வரும் காரியமோ
நிகராகாதே பரன் அன்பதற்கு!
வல்லமைகளுக்கோ, வாக்கின் வலிமைகட்கோ
சொல் வாதைகட்கோ, கடும் பாதைகட்கோ
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
சரணம் 2
அதிகாரங்களும் அவமானங்களும்
சதி மோசங்களும் அதை மேட்கொள்ளதே
உயர்வானாலும் தாழ்வானாலும்
முடிந்தாலும் எல்லாம் இழந்தாலும்
பிரிக்க முடியாது அவர் அன்பை விட்டு
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?
சரணம் 3
நன்றியால் உள்ளம் பொங்கி வழிகிறதே
நன்மை தான் அவர் செய்வதெல்லாம் எனக்கு
துதி, ஸ்தோத்திரம், கனம், வல்லமை, மகிமை
பதிலாக செலுத்தி வணங்குகிறேன்
பிரிக்க முடியாதவர் அன்பை விட்டு!
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்
கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்?