ஆவியானவரே பரலோகப்பிதாவே
Aaviyanavare Paraloga Pidhavae
Aaviyanavare Paraloga Pidhavae
ஆவியானவரே, பரலோகப்பிதாவே,
எந்தன் அன்பு நேசரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை(2) ஆவியிலே உமக்கு ஆராதனை
ஆராதனை(2) உண்மையிலே உமக்கு ஆராதனை (2)
1. என்னை அழைத்தவர் நீரே, என்னை நடத்திச் செல்வீரே (உம்) அன்பின் ஆவியால் தினம் நிரப்புகின்றீரே
(ஆராதனை ….)
2. பெலவீன நேரங்களில் என் பெலனாய் வந்தீரே
சுகவீன நேரங்களில் என் சுகமாய் மாறினீரே
(ஆராதனை ….)
3. சோர்ந்திடும் நேரமெல்லாம் என்னை தூக்கி சுமந்தீரே
தடுமாறும் நேரங்களில் என்னை தாங்கிக்கொண்டீரே
(ஆராதனை ….)
4. என் கன்மலையும் நீரே, என் கோட்டையும் நீரே உயர்ந்த அடைக்கலமும், நான் நம்பும் கேடகமும் நீரே
(ஆராதனை ….)