அபிஷேகியும் என்னை அனல்
Abishekium Ennai Anal Mootum
Abishekium Ennai Anal Mootum
அபிஷேகியும் என்னை அனல் மூட்டும்
ஆவியினால் என்னை நிரப்பிவிடும்
ஆர்ப்பரித்து துதித்திட
வல்லமையால் நிரம்பிட
அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே
1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட
யெசபேலின் ஆவிகள் கட்டப்பட
எதிரியின் சேனையை கலக்கிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )
2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே
சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே
இயேசுவின் நாமம் மகிமைப்பட
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )
3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே
சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே
அப்போஸ்தலர் ஆதி நிலை ஏகிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )