• waytochurch.com logo
Song # 28512

vaazhvin aatharamae


Vaazhvin Aatharamae


VAAZHVIN AATHARAMAE – D#/74


வாழ்வின் ஆதாரமே (உபா 33:27)
தாழ்வில் என் பெலனே -& 2 (ஏசா 49:5)
உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே &- 2


1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே (ஆதி 32:10)
அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே & 2
எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது


2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே & 2 (சங் 18:28)


3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் & 2 (சங் 116:13)
என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே (கலா 2:20)
மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com