Suthar Thuthikum Veedae சுத்தர் துதிக்கும் வீடே
Suthar Thuthikum Veedae
சுத்தர் துதிக்கும் வீடே
தெய்வ பக்தர்கள் ஆசையாமே
ஒளி மிளிரும் தங்கத் தெரு வீதியில்
ஆவலுடன் என்று நான் சேருவேனோ – 2
வானவரின் துதி நாதம்
தொனி முழங்கும் சாலேமில் – 2
என்று நான் சேருவேனோ பரசுதனை – 4
முத்தினால் நிரம்பியதாய் உள்ள
பனிரெண்டு வாசல்களே – அதை கண்டு
வர்ணித்து ஆனந்திப்பேன் – மணவாளன்
மனபாரம் நீக்கிடுவார் – 2
காரிருள் இல்லா நாடே – தேவ
மகிமையில் மின்னும் வீடே அதின் விளக்கோ
தேவாட்டுக் குட்டியாமே-அதில்
நின்று பாடித் துதித்திடுவேன் – 2
கட்டங்கள் இல்லா நாடே – தேவ
பக்தரின் பரம வீடே -அலங்கரித்த
புதிய எருசலேமில் திருமார்பில்
என்று நான் சாய்ந்திடுவேன் – 2
இக்காலப் பாடுகளோ தேவ பக்தர்க்கு
நிலையில்லையே-இனி வருமே
இணையில்லா கன மகிமை – அதை எண்ணி
எந்நாளும் வாழ்ந்திடுவோம் – 2