• waytochurch.com logo
Song # 28750

Vetkapadavillaye வெட்கப்படவில்லையே



வெட்கப்படவில்லையே
நான் வெட்கப்படவில்லையே
நீங்க கூட இருந்ததால
நான் வெட்கப்படவில்லையே-2

சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை
ஆயத்தப்படுத்துகின்றீர்
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்-2

நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி

1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்
துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள்-2
பட்சத்தில் கொண்டு வந்தீரே
சமாதானம் செய்யவைத்தீரே-2-நன்றி நன்றி

2.செத்தவனைப் போல மறக்கப்பட்டேன்
சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன்-2
தீமைகளை மாற்றிவிட்டீரே
நன்மையாய் முடியவைத்தீரே-2-நன்றி நன்றி


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com