• waytochurch.com logo
Song # 28758

Vin Greedam Pera விண் கிரீடம் பெற


Vin greedam Pera – விண் கிரீடம் பெற
1.விண் கிரீடம் பெறப் போருக்குக்
கிறிஸ்தேசு செல்கின்றார்;
அவரின் வெற்றிக் கொடிக்குக்
கீழாகப் போவோன் யார்?
தன் துக்கப் பாத்ரம் குடித்துச்
சோராமல் நிற்போன் யார்?
தன் சிலுவையை எடுத்து
அவர் பின் செல்வோன் யார்?
2.முதலாம் ரத்த சாட்சியாய்
மரித்தோன், வானத்தில்
கர்த்தாவை விசுவாசமாய்க்
கண்ணோக்கித் துன்பத்தில்
கொலைஞர்க்காக வேண்டிட,
சண்டாளரால் மாண்டான்;
பகைஞர்க்காக ஜெபிக்க
யார் அவர் பின் செல்வான்?
3.தெய்வாவி வந்து தங்கின
ஈராறு சீஷர்கள்,
மகத்வமாய் விளங்கின
நம்பிக்கை யுள்ளோர்கள்,
தீ, துன்பம், வாளைச் சகித்தே
சிங்கத்தால் பீறுண்டார்;
மரிக்கவும் அஞ்சாமலே
அவர்போல் செல்வோர் யார்?
4.சிறந்த சேனா வீரராய்க்
கெம்பீரக் கூட்டத்தார்
சிங்காசனத்தைச் சூழ்ந்தோராய்க்
கொண்டாடி நிற்கிறார்;
எப்பாடும் நீங்கி மோட்சத்தைச்
சேர்ந்தோர்போல் நாங்களும்
உம்மிடம் சேர அருளை,
கர்த்தா, கடாட்சியும்.

vin greedam pera – vinn kireedam pera
1.vinn kireedam perap porukkuk
kiristhaesu selkintar;
avarin vettik kotikkuk
geelaakap povon yaar?
than thukkap paathram kutiththuch
soraamal nirpon yaar?
than siluvaiyai eduththu
avar pin selvon yaar?
2.muthalaam raththa saatchiyaay
mariththon, vaanaththil
karththaavai visuvaasamaayk
kannnnokkith thunpaththil
kolainjarkkaaka vaenntida,
sanndaalaraal maanndaan;
pakainjarkkaaka jepikka
yaar avar pin selvaan?
3.theyvaavi vanthu thangina
eeraatru seesharkal,
makathvamaay vilangina
nampikkai yullorkal,
thee, thunpam, vaalaich sakiththae
singaththaal peerunndaar;
marikkavum anjaamalae
avarpol selvor yaar?
4.sirantha senaa veeraraayk
kempeerak koottaththaar
singaasanaththaich soolnthoraayk
konndaati nirkiraar;
eppaadum neengi motchaththaich
sernthorpol naangalum
ummidam sera arulai,
karththaa, kadaatchiyum.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com