Nachathiram Vaanathula வானத்துல நட்சத்திரம்
வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram
வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2
நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2
தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2
தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல..
மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2
அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்
இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2
நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2
இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல…
கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2
முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான்,
பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2
இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல
இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல…
vaanaththula natchaththiram-vaanathula nachathiram
vaanaththula natchaththiram, poomiyila muththuchcharam,-2
natchaththiram vanthu nintathu, muththuchcharam ingu piranthathu-2
thaeti vantha thaevar karam, soolnthiruntha paavamaram -2
thaevar karam thaeti vanthathu, paavamaram otipponathu – 2 – vaanaththula..
maalikaiyum illa, makudamum illa, mannavar vanthaaru manakkavalai illa-2
adadaa thinndaattangal konndaattamaa maarum
inimae thukkamellaam santhosamaakum -2
nammodu uravaada oru paalanaay , vaathum soothum illaamalae -2
yesu enta naamam ententum eppothum – vaanaththula…
kanndathu kaatchi, konndathu meetchi .aneethiyum otippochchi, neethiyaachchu -2
munthina aatham vanthu paavaththaiyae thanthaan,
pinthina aatham yesu motchaththaiyae tharuvaar-2
ithupola oru theyvam piranthathilla, inimaelum ithupola varuvathilla
yesu enta naamam ententum eppothum – vaanaththula…