Veesum Kaatrum Madhiyum Malarum வீசும் காற்றும் மதியும் மலரும்
வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum
வீசும் காற்றும் மதியும் மலரும் புகழ்ந்து பாடட்டும்
விண் தூதர் கூட்டம் உம்மை என்றும் வியந்து போற்றட்டும்
மண்ணில் வாழும் யாவும் உந்தன் பாதம் பணியட்டும்
Hallelu Hallelu Hallelu Halleluah…….. Halleluah
1. அன்னை மரியின் மடியில் மலர் போல் அழகாய் துயிலுகின்றார்
விண்ணும் மண்ணும் படைத்த தேவன் சிசுவாய் உருவெடுத்தார்
பொன்னும் இல்லை பொருளும் இல்லை எங்கள் கைகளிலே
அன்பாய் கீதம் அழகாய் பாடி உம்மைப் போற்றட்டுமே
2. ஈசாய் என்னும் மரத்தின் அடியில் தோன்றும் இளந்துளிரே
பாசம் எம்மேல் காட்டிடவே நீ கருணைக் கூர்ந்தனையோ
வெள்ளைப் போளம் தூபவர்கம் சாஸ்திரிகள் கொடுத்தார்
கண்ணே உந்தன் கண்கள் மூட கானம் பாடட்டுமே
3. நீதியின் சூரியனாக நீரும் உதித்து வந்தீரோ
பாவியை மீட்கும் பணியில் உம்மைக் கொடுக்க வந்தீரோ
மேய்ப்பர் போற்றும் குடிலில் துயிலும் அழகே இயேசு பாலா
காப்பாய் எம்மைக் கருணை மழையால் என்று பாடட்டுமே
veesum kaattum mathiyum malarum -veesum kaatrum madhiyum malarum
veesum kaattum mathiyum malarum pukalnthu paadattum
vinn thoothar koottam ummai entum viyanthu pottattum
mannnnil vaalum yaavum unthan paatham panniyattum
hallelu hallelu hallelu halleluah…….. halleluah
1. annai mariyin matiyil malar pol alakaay thuyilukintar
vinnnum mannnum pataiththa thaevan sisuvaay uruveduththaar
ponnum illai porulum illai engal kaikalilae
anpaay geetham alakaay paati ummaip pottattumae
2. eesaay ennum maraththin atiyil thontum ilanthulirae
paasam emmael kaattidavae nee karunnaik koornthanaiyo
vellaip polam thoopavarkam saasthirikal koduththaar
kannnnee unthan kannkal mooda kaanam paadattumae
3. neethiyin sooriyanaaka neerum uthiththu vantheero
paaviyai meetkum panniyil ummaik kodukka vantheero
maeyppar pottum kutilil thuyilum alakae yesu paalaa
kaappaay emmaik karunnai malaiyaal entu paadattumae