Romba Romba Santhosham ரொம்ப ரொம்ப சந்தோசம்
ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப சந்தோசம்
ரட்சகர்தான் பிறந்துவிட்டார்
மிகுந்த சந்தோசம்
குயில் போல் பாடிடவா
மயில் போல ஆடிடவா
பறக்கும் தூதரைபோல் வாழ்த்து சொல்லிடவா
குக்கு குக்கு குக்குக்கு
சத்திரத்தின் தாழ்ப்பாழ் எல்லாம் சாத்தி இருக்கு
ஆணவத்தின் உள்ளம் எல்லாம் பூட்டி இருக்கு
ஆ தொழுவம் அன்பினிலே பூத்து இருக்கு
ஆண்டவரின் வருகியினை பார்த்து இருக்கு
சுற்றிலுமே குளிரடிக்கும் காத்து இருக்கு
காற்றினிலே தூதர்களின் பாட்டு இருக்கு
நட்சத்திரம் விண்ணில் இருக்கு
நற்செய்தியும் மண்ணில் இருக்கு
நட்சத்திரம் விண்ணில் இருக்கு
நற்செய்தியும் மண்ணில் இருக்கு
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா – ரொம்ப ரொம்ப
மனிதனையே தன் சாயலாய் படைத்தவர் தானோ
மனிதனை போல் மண்ணுருவாய் உதித்தவர்
முற்பிதாக்கள் பிறக்கும் முன்னே இருந்தவர்
தற்பிதாவின் திருமகனாய் பிறந்தவர்
உலக்கொரு பொக்கிஷமாய் கிடைத்தவர்
மன்னுயிர்காய் தன்னுயிரை கொடுத்தவர்
மண்ணில் வந்த மாபரன் தானோ
தன்னை தந்த கோமகன் தானோ
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா
மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா
புகழவா புகழவா இறையை புகழவா – ரொம்ப ரொம்ப