மறந்தேனே
Maranthene
மறந்தேனே
மனதில் வைக்கவில்லையே
விலகினனே
பின் தொடர்ந்து வந்திரே
மறவாத தேவன் நீரே
விட்டு விலகாத தெய்வம் நீரே
வேதனை வந்தபோது
தேவன் இல்லை என்றேன்
துன்பம் நிறைந்தபோது
தூரம் போனேன்
ஏமாற்றம் வந்த போது
வார்த்தையை கொட்டினேன்
உடைந்தவளாய் நான்
உம்மை மறந்தேன்(இழந்தேன்)
ஒன்றுக்கும் உதவாத
என்னைத் தேடி வந்தீர்
இழந்ததை எல்லாம்
மீட்டு தந்தீர்
வெட்கப்பட்ட இடத்திலே
கொண்டு வந்து நிறுத்தினீர்
நிறுத்தின இடத்திலே
தலையை உயர்த்தினீர்
சிலுவையை எனக்காக
சுமந்தது ஏனோ
சீர் கெட்ட எந்தனின்
செய்கைக்கு தானோ
இன்னும் அதிகமாய்
நேசிப்பதேனோ
மீட்டது உந்தனின்
ரத்தம் தானோ
நிலைப்பது உந்தனின்
கிருபை தானோ