Mannil Uthithar மண்ணில் உதித்தார்
நள்ளிரவினில் பனிவேலையில்
பரன் இயேசு மண்ணில் உதித்தார்
மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
மகிபன் இயேசு பாலன் பிறந்தார்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
ஆனந்த கீதம் பாடுவோம்
சமாதானம் எங்கும் பெருகிடவே
மன்னன் இயேசு பிறந்தார்
பெத்தலையில் பிறந்தாரே
முன்னணையில் பிறந்தாரே
வான்தூதர் பாட சேனைகள் கூட
மகிபன் இயேசு பிறந்தார்
கன்னிமரி பாலனாய்
விந்தையாய் வந்தவரே
கண்மணியே விண்மணியே
உம்மை கருத்துடன் பாடிடுவோம்
ஏழ்மையின் கோலமாய்
தாழ்மையின் ரூபமாய்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பாலன் இயேசு பிறந்தார்