Povom Paranagarku Jalthi போவோம் பரநகர்க்கு ஜல்தி
போவோம் பரநகர்க்கு ஜல்தி – Povom Paranagarku Jalthi
1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள்
போவோம் பரநகர்க்கு, ஜல்தி
ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி
2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால்
எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்து
இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம்
3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்து
பொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில்
மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம்
4. இந்த உலகம் நாடகமே – அல்லால் வேறல்ல
சொந்த நம் நல்ல நாடேகுவோமே – இதற்கு வேண்டி
முந்த இயேசையன் காட்டித் தந்த வழியிலோடி – போவோம்
povom paranakarkku jalthi – povom paranagarku jalthi
1. povom paranakarkku, jalthi – purappadungal
povom paranakarkku, jalthi
jalthi, jalthi, jalthi, jalthi
2. ingae naalainthu meththaiveedu – naalaiyiranthaal
engae irukku minthakkoodu? – ithaiyarinthu
inte mananthirumpi nante ulanthirunthi – povom
3. enna patiththirunthaalenna? – un veedakaththu
pon kuvinthirunthaalumenna – anniya naalil
mannnnil konndunnai mooda, enna vanthidum kooda – povom
4. intha ulakam naadakamae – allaal vaeralla
sontha nam nalla naataekuvomae – itharku vaennti
muntha iyaesaiyan kaattith thantha valiyiloti – povom