• waytochurch.com logo
Song # 28861

Piranthathu Iniya பிறந்தது இனிய



பிறந்தது இனிய புது ஆண்டு
மகிழ்ந்து துதிப்பாடு - (2)
இயேசுவே ஒளியாய் உடன் வருவார்
இனி கலங்கிட தேவையில்லை - (2)

அல்லேலூயா துதிப்பாடு
அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)

1. சென்ற நாளில் துன்பங்கள் மறைந்தது
எல்லாம் சந்தோஷம் இனி எல்லாம் சந்தோஷம் - (2)
இருண்ட நம் வாழ்வை மாற்றின இன்று
உதித்தவர் வெளிச்சம்
இன்று உதித்தவர் வெளிச்சம் - (2)
பயங்கள் இல்லை தோல்வி இல்லை
கர்த்தர் நம் துருகம் - (2)

அல்லேலூயா துதிப்பாடு
அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)

2. வார்த்தையாகி நம்மில் வாழ்பவர்
என்றும் துணை இருப்பார்
அவர் என்றும் துணை இருப்பார் - (2)
பாரம் மாந்தர் கண்ணீர் துடைக்க
நமக்கு பெலன் தருவார்
நமக்கு பெலன் தருவார் - (2)
செட்டைகளின் நிழலில் நம்மை மறைத்து
என்றும் காத்துக் கொள்வார் - (2)

அல்லேலூயா துதிப்பாடு
அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)

3. பள்ளங்கள் நிறையும் மேடுகள் மறையும்
பரமனின் அருள் பெருகும் நம் பரமனின் அருள் பெருகும் - (2)
புதிய இவ்வாண்டில் புதுமைகள் பிறக்கும்
புதுமைகள் தினம் நடக்கும் - (2)
இயேசுவின் நம்மில் வாழ்வதினால்
கேட்பதெல்லாம் கிடைக்கும் - (2)

அல்லேலூயா துதிப்பாடு
அவர் நாமத்தை புகழ்ப்பாடு - (2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com