Paavi Nee Oodiva பாவி நீ ஓடிவா
பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva
Paavi Nee Oodiva Meetpar Lyrics in Tamil :
பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
கோரா மா பாடுகள் உனக்காகவே
வந்திடுவாய் என் மகனே
பாவ ரோகங்கள் நீக்கிடவே
வந்திடுவாய் என் மகனே
1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன்
வாறாலே அடிபடும் வேதனை பார்
விண்ணாளும் தேவனின் ஏக சுதன்
முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்
இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை
பழுதற்ற தூயனாய் மாற்றிடுமே
சத்திய தேவனின் மீட்பு – உன்னை
நித்திய வாழ்வினில் சேர்த்திடுமே
பரம் – பதமே – உன்னை நித்தமே – வாழ்த்திடுமே – பாவி நீ
2.)சிந்தையின் பாவங்கள் நீக்கிடவே
நிந்தையின் ரூபமாய் மாறினாரே – தன்
மந்தையில் உன்னையும் சேர்த்திடவே
தன்னையே தந்திட்ட அன்பிதுவே
உனக்கெதிரான கையெழுத்தை
மூன்றாணி கொன்டே மாற்றினாரே
பாவத்தில் மரித்திட்ட உன்னை – ஏசு
பாசமாய் உயிரிப்பிக்க மாண்டாரே
சிலுவை நிழல் – உனக்கு தரும் – பேரானந்தம் – பாவி நீ
paavi nee otivaa – paavi nee oodiva
paavi nee oodiva meetpar lyrics in tamil :
paavi nee otivaa
meetpar alaikkiraar
koraa maa paadukal unakkaakavae
vanthiduvaay en makanae
paava rokangal neekkidavae
vanthiduvaay en makanae
1.)vaan puvi pataiththitta valla paran
vaaraalae atipadum vaethanai paar
vinnnnaalum thaevanin aeka suthan
mulmuti aettidum anpinai paar
innaiyatta aesuvin anpu – unnai
paluthatta thooyanaay maattidumae
saththiya thaevanin meetpu – unnai
niththiya vaalvinil serththidumae
param – pathamae – unnai niththamae – vaalththidumae – paavi nee
2.)sinthaiyin paavangal neekkidavae
ninthaiyin roopamaay maarinaarae – than
manthaiyil unnaiyum serththidavae
thannaiyae thanthitta anpithuvae
unakkethiraana kaiyeluththai
moontanni kontae maattinaarae
paavaththil mariththitta unnai – aesu
paasamaay uyirippikka maanndaarae
siluvai nilal – unakku tharum – paeraanantham – paavi nee