Paara Kurusil Paraloaga பாரக்குருசில் பரலோக
Paara kurusil paraloaga – பாரக்குருசில் பரலோக
சரணங்கள்
1. பாரக்குருசில் பரலோக இராஜன்
பாதகனைப் போல் தொங்குகிறாரே
பார்! அவரின் திரு இரத்தம் உன்
பாவங்கள் போக்கிடப் பாய்ந்திடுதே
பல்லவி
வந்திடுவாய் இயேசுவண்டை
வருந்தியே அழைக்கிறாரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே – உன்
வாதைகள் நீக்குவாரே
2. இருதயத்தின் பாரம் அறிந்து மெய்யான
இளைப்பாறுதலை அளித்திடுவாரே
இன்னுமென்ன தாமதமோ
இன்றே இரட்சிப்படைய வருவாய் — வந்திடுவாய்
3. சிலுவையின் மீதில் சுமந்தனரே உன்
சாப ரோகங்கள் தம் சரீரத்தில்
சர்வ வல்ல வாக்கை நம்பி
சார்ந்து சுகம் பெறவே வருவாய் — வந்திடுவாய்
4. நித்திய வாழ்வு பெற்றிட நீயும்
நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்
நீசனென்று தள்ளாதுன்னை
நீதியின் பாதையில் சேர்த்திடுவார் — வந்திடுவாய்
5. இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம்
இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள்
இல்லையே இந் நேசரைப் போல்
இகமதில் வேறோர் அன்பருனக்கே — வந்திடுவாய்
paara kurusil paraloaga – paarakkurusil paraloka
saranangal
1. paarakkurusil paraloka iraajan
paathakanaip pol thongukiraarae
paar! avarin thiru iraththam un
paavangal pokkidap paaynthiduthae
pallavi
vanthiduvaay yesuvanntai
varunthiyae alaikkiraarae
vaanjaikal theerppavarae – un
vaathaikal neekkuvaarae
2. iruthayaththin paaram arinthu meyyaana
ilaippaaruthalai aliththiduvaarae
innumenna thaamathamo
inte iratchippataiya varuvaay — vanthiduvaay
3. siluvaiyin meethil sumanthanarae un
saapa rokangal tham sareeraththil
sarva valla vaakkai nampi
saarnthu sukam peravae varuvaay — vanthiduvaay
4. niththiya vaalvu pettida neeyum
niththiya jeeva oottanntai vaaraay
neesanentu thallaathunnai
neethiyin paathaiyil serththiduvaar — vanthiduvaay
5. yesuvin naamam oottunnda thailam
inpam avarin atharaththin molikal
illaiyae in naesaraip pol
ikamathil vaeror anparunakkae — vanthiduvaay