பரமனின் பாதம்
Paramanin Padham
பரமனின் பாதம் தேடியே
சிலுவை அன்பை நாடியே
ஓடி வா இயேசுவை நம்பியே
அடைக்கலம் தருவார் தன்னையே
அழைக்கிறார் என் பரமன் இயேசு
அழைக்கிறார் என் பரமன் இயேசு
1.காயப்பட்ட இதயமே உனக்கு மருந்தாய் இயேசு உண்டு
இஷ்டப்பட்டு ஏற்றுக்கொண்டால் ஆனந்த வாழ்வு உனக்கு உண்டு
பரமனின் பாதம் ஓடோடி வா சிலுவை அன்பை நாடியே வா
2.துக்கங்களை சந்தோஷமாய் மாற்றிடும் நல்ல தேவன் உண்டு
கல்வாரி சிலுவையில் பெற்றெடுத்த ஆண்டவர் அழைப்பு உனக்கும் உண்டு
பரமனின் பாதம் ஓடோடி வா சிலுவை அன்பை நாடியே வா
3.வியாதியையும் நீக்கிவிடும் வல்லமை கொண்ட தேவன் உண்டு
அற்புதங்கள் செய்திடுவார் நம்பிக்கையோடே ஒப்புக்கொடு
பரமனின் பாதம் ஓடோடி வா சிலுவை அன்பை நாடியே வா