Navakkani நவக்கனி
அன்பு சந்தோஷம் சமாதானம்
நீடிய பொறுமை தயவு
நற்குணம் சாந்தம் விசுவாசம்
இச்சையடக்கமே நவக்கனி
கனி கொடுத்தே நிலைத்திருப்பேன்
கிறிஸ்துவிலே என்றென்றுமே
1. மாம்சமும் ஆவியும் இணையாகுமோ
இரண்டும் எதிராய் செயல்படுமே
தேவனின் ஆவியில் நாம் நடந்தால்
சரீரத்தின் ஆசைகள் ஒழிந்திடுமே
நியாயப்பிரமானத்தின் நிந்தை எதற்கு
அன்பிலே நிறைவேறிடும் நமக்கு
ஆவியின் வழிகள் அறிந்து கொண்டால்
அடிமை நுகங்கள் முறிந்து விடும்
2. சுயாதீனராய் நாம் அழைக்கப்பட்டோம்
அன்பினிலே அதை அனுசரிப்போம்
ஆவியின் கனிகள் அகம் சேர்ந்தால்
மாமிச கிரியைகள் மடிந்துவிடும்
தேவ சாயல் அடைந்திடும் நேரம்
சுமந்து தீரும் சிலுவையின் பாரம்
கிறிஸ்துவின் அன்பை உடையவன்
தன் இதய விருப்பத்தை வெறுத்திடவே..