• waytochurch.com logo
Song # 28975

Devathi Devan Manuvaanarae தேவாதி தேவன் மனுவானாரே


தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae
பல்லவி
தேவாதி தேவன் தேவாதி தேவன்
மனுவானாரே – உன்னத
சரணங்கள்
1. பரலோகச் செல்வத்தை
பார்த்திபன் வெறுத்து
நரரூபமானாரே
பாவி உன்னை மீட்க! – தேவாதி
2. திருமறை வாக்குகள்
பரன் நிறைவேற்றிட
சிறுமையாய் உதித்த
கிருபைச் சுதனான – தேவாதி
3. மன்னுயிர்க்காகத்
தன்னுயிரைத்தர
தானாக நேசத்தால்
வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி
4. தேவ துரோகிகள்
வேதனையை நீக்கி
பேதைகள் கோபிகள்
வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி
5. மார்க்க வைராக்கியரே
மூர்க்க வெறியரே
பார்த்திபன் நேசத்தை
பார்த்தால் திகைப்பீரே – தேவாதி
6. இந்த நல்வேளையில்
வந்துனை மீட்பர்க்கு
தந்தால் உன்னை இவர்
சொந்தமாய் ஏற்பார் காண் – தேவாதி

thaevaathi thaevan manuvaanaarae – devathi devan manuvaanarae
pallavi
thaevaathi thaevan thaevaathi thaevan
manuvaanaarae – unnatha
saranangal
1. paralokach selvaththai
paarththipan veruththu
nararoopamaanaarae
paavi unnai meetka! – thaevaathi
2. thirumarai vaakkukal
paran niraivaettida
sirumaiyaay uthiththa
kirupaich suthanaana – thaevaathi
3. mannuyirkkaakath
thannuyiraiththara
thaanaaka naesaththaal
vaanaasanam aakivitta – thaevaathi
4. thaeva thurokikal
vaethanaiyai neekki
paethaikal kopikal
vaethaththaik kaikkolla – thaevaathi
5. maarkka vairaakkiyarae
moorkka veriyarae
paarththipan naesaththai
paarththaal thikaippeerae – thaevaathi
6. intha nalvaelaiyil
vanthunai meetparkku
thanthaal unnai ivar
sonthamaay aerpaar kaann – thaevaathi


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com