Thooya Thooya Devanai Naam தூய தூய தேவனை நாம்
தூய தூய தேவனை நாம் – Thooya Thooya Devanai Naam
பல்லவி
தூய தூய தேவனை நாம்
போற்றி யேற்றிப் புகழ்ந்திடுவோம்
சரணங்கள்
1. ஸ்தோத்திரக் கீதங்கள் முழங்கிடுதே – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
பாவமாம் சேற்றினில் புரண்டதாம் எம்மையே
பாசமாய் இரங்கியே இரட்சித்தாரே __ தூய
2. நன்றியால் உள்ளங்கள் நிறைந்திடுதே – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
எத்தனை துன்பங்கள் துயரங்கள் பெருகினும்
இத்தனை கருணையால் தாங்கிடும் மா — தூய
3. ஆதரவளித்திடும் ஆருயிரே – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
கோரமாய்ச் சோதனை சூழ்ந்திடும் வேளையில்
மாறா தம் வார்த்தையால் தேற்றுவாரே — தூய
4. பாடியே அகமகிழ்வோம் – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
மேலோக பாக்கியம் எண்ணிடும் வேளையில்
மா பரமானந்தம் பொங்கிடுதே — தூய
5. அன்பின் மணாளனே வந்திடுவார் – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
பூரண பரிசுத்த வான்களோடேகியே
பரம சீயோனில் நாம் வாழ்ந்திடுவோம் -தூய
thooya thooya thaevanai naam – thooya thooya devanai naam
pallavi
thooya thooya thaevanai naam
potti yaettip pukalnthiduvom
saranangal
1. sthoththirak geethangal mulangiduthae – allaelooyaa!
allaelooyaa ! thuthi sthoththiramae
paavamaam settinil puranndathaam emmaiyae
paasamaay irangiyae iratchiththaarae __ thooya
2. nantiyaal ullangal nirainthiduthae – allaelooyaa!
allaelooyaa ! thuthi sthoththiramae
eththanai thunpangal thuyarangal perukinum
iththanai karunnaiyaal thaangidum maa — thooya
3. aatharavaliththidum aaruyirae – allaelooyaa!
allaelooyaa ! thuthi sthoththiramae
koramaaych sothanai soolnthidum vaelaiyil
maaraa tham vaarththaiyaal thaettuvaarae — thooya
4. paatiyae akamakilvom – allaelooyaa!
allaelooyaa ! thuthi sthoththiramae
maeloka paakkiyam ennnnidum vaelaiyil
maa paramaanantham pongiduthae — thooya
5. anpin mannaalanae vanthiduvaar – allaelooyaa!
allaelooyaa ! thuthi sthoththiramae
poorana parisuththa vaankalotaekiyae
parama seeyonil naam vaalnthiduvom -thooya