Thalladi Thadumari Nadanthuvarum தள்ளாடி தடுமாறி நடந்துவரும்
Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும்
Lyrics:
தள்ளாடி தடுமாறி நடந்துவரும்
நண்பா நீ கலங்காதே
தள்ளாத நேசர் இயேசுவுண்டு
தாங்கி நடத்திடுவார்
கலங்காதே நீ கலங்காதே
காலங்கள் மாறிடும் கலங்காதே
காய்ந்த சருகானதோ- உன் வாழ்வு
வாடிய மலரானதோ
உலர்ந்த எலும்பினை உயிர் பெறச்
செய்தவர்
உன் வாழ்வை மலரச்செய்வார்
மறுவாழ்வு தந்திடுவார்
மலர்ந்திடச் செய்திடுவார்
எப்பக்கம் சாய்ந்திட்டாலும்- நெருப்பு
மேல்நோக்கி எரிவது போல்
எத்தனை துன்பம் துயரங்கள் வந்தாலும்
துவளாமல் முன் சென்றிடு
எழும்பிடுவாய் ஒளிவீச
உலகெங்கும் மணம் வீச
கலைந்த மேகங்கள் போல்- உன் கனவுகள்
கலைந்து தொலைந்திட்டதோ
அதினதின் காலத்தில் அனைத்தையும்
செய்பவர்
கனவுகள் நிறைவேற்றுவார்
கனவுகள் நிறைவேற
காலங்கள் வந்திடுமே.
thalladi thadumari nadanthuvarum – thallaati thadumaari nadanthuvarum
lyrics:
thallaati thadumaari nadanthuvarum
nannpaa nee kalangaathae
thallaatha naesar yesuvunndu
thaangi nadaththiduvaar
kalangaathae nee kalangaathae
kaalangal maaridum kalangaathae
kaayntha sarukaanatho- un vaalvu
vaatiya malaraanatho
ularntha elumpinai uyir perach
seythavar
un vaalvai malarachcheyvaar
maruvaalvu thanthiduvaar
malarnthidach seythiduvaar
eppakkam saaynthittalum- neruppu
maelnnokki erivathu pol
eththanai thunpam thuyarangal vanthaalum
thuvalaamal mun sentidu
elumpiduvaay oliveesa
ulakengum manam veesa
kalaintha maekangal pol- un kanavukal
kalainthu tholainthittatho
athinathin kaalaththil anaiththaiyum
seypavar
kanavukal niraivaettuvaar
kanavukal niraivaera
kaalangal vanthidumae.