Sobaname Sobaname சோபனமே சோபனமே
பல்லவி
சோபனமே, சோபனமே
சோபன பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே
சரணங்கள்
1. சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தாவீது மைந்தர்க்கு சோபனம் சோபனம்
எங்கள் அரசர்க்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்க்கு சோபனம் சோபனம் — சோபனமே
2. ஆட்டு குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம்
தேட்ட கணவர்க்கு சோபனம் சோபனம்
செல்வ குமாரிக்கு சோபனம் சோபனம் — சோபனமே