• waytochurch.com logo
Song # 29027

Selluvom Vareer செல்லுவோம் வாரீர்


செல்லுவோம் வாரீர் – selluvom vareer
செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில்
1.சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி
அல்லற்படுகின்ற – ஆகலத்தைப் பார்க்க – செல்
2.ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து
கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்
3.மூங்கில் தடியாலே – ஓங்கியே அடிக்க
ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்
4.சத்துருவின் கையில் – உற்ற ஆட்டை மீட்க
மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்
5.கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற
அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்
6.பாவவினைபோக – தேவ தயவாக
ஜீவ பலியான – இயேசையனைப் பார்க்க – செல்
7.நித்திய சாவின் கூரை – பக்தி தேகத்தேற்று
வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்
8.கடனாளிகட்குப் – பிணையாளியாக
உடலுயி ரீந்த – உன்னதனைப் பார்க்க – செல்
9.பிடித்து உதைத்து – இடித்து வதைத்து
அடிக்கப்படும் நல் – ஆட்டுக்குட்டியைப் பார்க்க – செல்

selluvom vaareer – selluvom vareer
selluvom vaareer! siluvaiyatiyil
1.sollariya naathan – suya sori sinthi
allarpadukinta – aakalaththaip paarkka – sel
2.onnmuti mannanaar -munnmutithariththu
kannmayangith thongum – kaatchiyaip paarkka – sel
3.moongil thatiyaalae – ongiyae atikka
aengiyae thaviththa – iyaesaiyanaip paarkka – sel
4.saththuruvin kaiyil – utta aattaை meetka
meththap paadupatta – nalmaeyppanaik kaana – sel
5.kirupaasanaththil- kuruthiyodu senta
arumaip pirathaana – aasaariyanaip paarkka – sel
6.paavavinaipoka – thaeva thayavaaka
jeeva paliyaana – iyaesaiyanaip paarkka – sel
7.niththiya saavin koorai – pakthi thaekaththaettu
vettipetta yesu – maesiyaavaip paarkka – sel
8.kadanaalikatkup – pinnaiyaaliyaaka
udaluyi reentha – unnathanaip paarkka – sel
9.pitiththu uthaiththu – itiththu vathaiththu
atikkappadum nal – aattukkuttiyaip paarkka – sel


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com