• waytochurch.com logo
Song # 29033

Siluvayil Enthan Paava சிலுவையில் எந்தன் பாவ


சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்-2
இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையில் உள்ள பிளவை அவரின்
சிலுவையாலே இணைத்துவிட்டார்
மனிதனை அவர் மீட்டுவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில்
விழுந்த தூதன் விதைத்த வினைகள்
மனித மனதில் முளைத்த விஷங்கள்-2
அன்பு தணிந்த மனிதன் மாற
அன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2
அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும்
நீயும் நானும் சுமக்க வேண்டும்
பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2
பாவம் அறியா சுத்தக் கண்ணன்
பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2
பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும்

siluvaiyil enthan paavak karaikalai
salavai seythu vittar
niluvaiyil ulla paava sumaikalai
sumanthu theerththuvittar-2
iraivanukkum manithanukkum
itaiyil ulla pilavai avarin
siluvaiyaalae innaiththuvittar
manithanai avar meettuvittar
siluvai naayakan jeyiththuvittar-2-siluvaiyil
viluntha thoothan vithaiththa vinaikal
manitha manathil mulaiththa vishangal-2
anpu thannintha manithan maara
anpu niraintha thaevan maanndaar-2
anpu niraintha theyvam maanndaar-iraivanukkum
neeyum naanum sumakka vaenndum
paavi namakkaay avarae sumanthaar-2
paavam ariyaa suththak kannnan
paavam aaki suththam seythaar-2
paavam aaki siththam seythaar-iraivanukkum


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com