Siluvai Veerane சிலுவை வீரன
தெருவில் நடந்து செல்லும் மெழுகுதிரியே
உன்னில் இருந்து வழியும் மெழுகுத்துளியே
ஒருநாள் விளையும் நீ விதைத்த விதையை
அறுவடை செய்வாய் நீ சிரித்தபடியே
சிலுவை வீரனே சுவிசேஷக்காரனே
தேசங்கள் சென்றிடு இயேசுவை கூறிடு
மனிதனின் கைகளில் கற்கள் இருந்தால் என்ன?
பேசிடும் வார்த்தைகளில் கத்திகள் பாய்ந்தால் என்ன?
சதை தொங்க ஒரு உருவம் சிலுவையில் தொங்கிட
கண்ணீரைத் துடைத்திடு உன் ஓட்டத்தை தொடர்ந்திடு
சிலுவை வீரனே சுவிசேஷக்காரனே
தேசங்கள் சென்றிடு இயேசுவை கூறிடு
தெருவில் நடந்து செல்லும் மெழுகுதிரியே
உன்னில் இருந்து வழியும் மெழுகுத்துளியே
ஒருநாள் விளையும் நீ விதைத்த விதையை
அறுவடை செய்வாய் நீ சிரித்தபடியே