Christmas Kondattam கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்த்மஸ் கொண்டாட்டம் கொண்டாட்டம்
கிறிஸ்த்மஸ் கொண்டாட்டம் கொண்டாட்டம்
விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே
ஜாதிமத பேதமின்றி அனைவருக்கும் நல்லதொரு
கிறிஸ்த்மஸ் விருந்து வைப்போமே
காலையிலே கலக்கலா கலக்கலா கலக்கலா
தோச கறி புலாலா புலாலா புலாலா
காலையிலே கலகலாவில் ஆரம்பிப்போமே
தோச கறி முட்டையுடன் மீன் கொடுப்போமே
கொத்துக்கறி... இறாமீனு...
ஆப்பத்தோடு பாயாவும் சேர்த்தடிப்போமே
வான்கோழி ரோஸ்டுதான்...
கோழிகுருமா ஜோறுதான்...
கிறிஸ்த்மஸ் கேக்கோடு சாப்பிடுவோமே
வீட்டுக்காரி புலம்புறா புலம்புறா புலம்புறா
வேலைக்காரி மொறைக்கிறா மொறைக்கிறா மொறைக்கிறா
விருந்துண்ண ஒருவருமே வந்து சேரல
பசியெடுக்குது பசியெடுக்குது
கிறிஸ்த்மஸ் விருந்து வெயிட் பண்ணுது
ஆண்ட்டி வாங்க அங்கிள் வாங்க
மாமி வாங்க எல்லாம் வாங்க சாப்பிட வாங்க
பிரியாணி ஜோறுதான் ரோசு குக்கீ ஜோறுதான்
கிறிஸ்த்மஸ் கேக்கோடு சாப்பிடுவோமே
ஆடுவதும் பாடுவதும் கிறிஸ்த்மஸ் ஆகுமோ
உண்டு உடுத்தி மகிழ்ந்துவிட்டால் கடமை தீருமோ
இயேசுவைபோல் கிறிஸ்தவர்கள் அன்பு காட்டணும்
கிறிஸ்த்தவரின் வாழ்வை இந்த உலகம் போற்றணும்
உன்னை பார்த்து உலகில் வாழும் மக்கள் திருந்தணும்
உனது உருவில் இயேசுவை இந்த உலகம் பார்க்கணும்