Kalvari Malaithanile Karthar கல்வாரி மலைதனிலே கர்த்தர்
LYRICS
கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டு
கண்ணீர் பெருகுதையா – அவர்
உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள்
உள்ளத்தை உடைக்குதையா
சரணங்கள்
1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்
இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2
பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமே
பாதகர்க்காய் வேண்டினார் -2
2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட
களைந்த நிலையில் கர்த்தர் -2
பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே
பரதேசில் இருபாய் என்றார்-2
3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்
சீராளன் தாயைப் பார்த்தார் – 2
பாசக் கண்களோடு பார்த்துமே யோவனை
பார் உந்தன் தாயை என்றார் -2
4. என் தேவனே என் தேவனே ஏன் என்னைக்
கைவிட்டீர் என்றுரைத்தார் – 2
தாகமாய் இருக்கிறேன் என்றவர் கூறவே
சேவகன் காடி கொடுத்தான் – 2
5. எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டார்
பொல்லாதார் மீட்படைய -2
உம்முடையக் கைகளில் எந்தன் ஆவியை
ஒப்பு விக்கின்றேன் என்றார் – 2
lyrics
kalvaari malaithanilae karththar siluvaik kanndu
kannnneer perukuthaiyaa – avar
uyara siluvaiyil uraiththa pon vaarththaikal
ullaththai utaikkuthaiyaa
saranangal
1. innilaththil thammaik kolai seyvaaraiyum
irangi mannippaar unntoo – 2
pithaavae ivarkatku manniyum entumae
paathakarkkaay vaenntinaar -2
2.kaayangal raththaththai kotta kann mangida
kalaintha nilaiyil karththar -2
paarththumae kalvanai intu ennudanae
parathaesil irupaay entar-2
3. sinthum raththavella siluvaiyil thongidum
seeraalan thaayaip paarththaar – 2
paasak kannkalodu paarththumae yovanai
paar unthan thaayai entar -2
4. en thaevanae en thaevanae aen ennaik
kaivittir enturaiththaar – 2
thaakamaay irukkiraen entavar kooravae
sevakan kaati koduththaan – 2
5. ellaam mutinthathu entu saththamittar
pollaathaar meetpataiya -2
ummutaiyak kaikalil enthan aaviyai
oppu vikkinten entar – 2