En Meetha Iththanai Anbu என் மீதா இத்தனை அன்பு
என் மீதா இத்தனை அன்பு
இயேசு ராஜா...
வானமும் பூமியும் யாவும் படைத்த வல்ல ராஜா ...
சர்வ வல்ல ராஜா... ( 2 )
இயேசு ராஜா .... __ ( 8 )
[ புது புது கிருபைகள்
தினம் தினம் வாழ்வினில்
அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 )
எங்கள் கண்கள் கண்ணீர் வடிகையில்
துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
தேடினால் காணப்படுகிறீர்
கூப்பிட்டால் பதில் தருகிறீர் ( 2 ) ]
{ பேரின்பம் இதுவன்றி வேறில்லை
சுகவாழ்வோ இதை போல ஏதும் இல்லை. ( 2 ) }
இயேசு ராஜா. ( 8 )
[ இத்தனை ஆண்டுகள் எம்மை உம் தோள்களில்
தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 )
உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம்
தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் (2)]
{ பேரின்பம் இதுவன்றி..... }
இயேசு ராஜா.... ( 8 )