Um Mugathin Oliyal உம் முகத்தின் ஒளியால்
உம் முகத்தின் ஒளியால்
வெறுமை மறைந்ததே
உம் மகிமை படர்ந்து
ஜீவன் பிறந்ததே
ஒரு பொழுதும் விலகா
உம் கிருபை தொடர்ந்ததே
என்னுள் தங்கி
சமாதானம் அளித்ததே
முன் செல்லும் பிரசன்னமே
இளைப்பாறுதலில் என்னை அமர்த்துதே
என்னை ஏந்தும் பிரசன்னமே
உயரங்களில் என்னை நிறுத்ததே
முன் செல்லும் பிரசன்னமே
என்னை ஏந்தும் பிரசன்னமே
பணீம் பணீம் என்னில் நதியாய் பாயுதே
பணீம் பணீம் என்னை தூக்கி சுமக்குதே
பணீம் பணீம் என்னை சூழ்ந்துக்கொள்ளுதே
பணீம் பணீம் உம்மை போல மாற்றுதே
இயேசுவின் வழியாய் உம் முகத்தை பார்க்கின்றேன்
பார்த்து பார்த்து உம்மை போல ஆகிறேன் திறந்த முகமாய் உம் மாட்சிமை காண்கின்றேன்
உம் சாயல் பெற்று (சாயலாக) மறுரூபம் அடைகிறேன்
உம் முகம் பிரகாசமே
உம் கண்கள் அக்கினி ஜுவாலையே -2
அன்பின் அக்கினி ஜுவாலையே
கிருபையின் அக்கினி ஜுவாலையே
Bridge
தேவ முகத்தின் பிரகாசமே
என் மேல் பலமாய் வீசுதே
தேவ மகிமையின் பிரசன்னமே
என்னுள் ஜீவனாய் பாயுதே