Ratchipin Aanantha Santhosangkaana இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா – Ratchipin Aanantha Santhosangkaana
பல்லவி
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா
சரணங்கள்
1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது
ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்
அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்
நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்
நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;
தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா – இரட்சி
iratchippin aanantha santhoshangaana otivaa – ratchipin aanantha santhosangkaana
pallavi
iratchippin aanantha santhoshangaana otivaa
patchamudanae iratchakaranntai oti vaa
saranangal
1. paavam pokkum nathi avar pakkam nintu oduthu
aavaludanae iratchakaranntai oti vaa – iratchi
2. un paava paaram neekka uthiram sintha atikonndaar
anpudanae iratchakaranntai oti vaa – iratchi
3. kalvaari maettil ainthu kaayangaatti nirkiraar
nal manathudan iratchakaranntai oti vaa – iratchi
4. aaseervaathaththaik koori anpudanae alaikkiraar
naesamudanae iratchakaranntai oti vaa – iratchi
5. paavi unnai eetaettap paralokam vittarae;
thaaviyae nee avar paathanthaeti oti vaa – iratchi