Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக
ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – Aayaththamaairungal Ethirpoga
பல்லவி
ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறி
யாத நேரம் வருவார் மணவாளன்
சரணங்கள்
1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம்
மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு – ஆய
2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர்
ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய
3. சத்திய வேத போதனையில் – நடந்து
உத்தமராய்த் தேவபக்தராய் – ஆய
4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்ய
ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க – ஆய
5. நித்திய ஆனந்த பாக்கியங்கள் – நல்ல
நேய மணவாளனோடனுபவிக்க – ஆய
aayaththamaayirungal ethirpoka – aayaththamaairungal ethirpoga
pallavi
aayaththamaayirungal ethirpoka – ari
yaatha naeram varuvaar manavaalan
saranangal
1. maaya paasa vinaikal maayththuvittu – manam
maari nal akachchuththam maruvik konndu – aaya
2. yesuvai nannpanaay aettukkonndu – avar
eeyum meych samaathaanam pettukkonndu – aaya
3. saththiya vaetha pothanaiyil – nadanthu
uththamaraayth thaevapaktharaay – aaya
4. jeeva kani pusiththu thirupthi kolla – nithya
jeeva thannnneer kutiththu sukiththirukka – aaya
5. niththiya aanantha paakkiyangal – nalla
naeya manavaalanodanupavikka – aaya