Amma Amma Arul Nirai அம்மா அம்மா அருள் நிறை
Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை
அம்மா அம்மா அருள் நிறை மரி அம்மா
அன்பாய் தேற்றும் மாசற்ற மரி அம்மா
நலன் பலன் பெற வேண்டி
நாநில மக்கள் கூடி
நின்பாதம் வந்தோம்
அம்மா மரியே மங்கா ஒளி விளக்கே
அம்மா உந்தன் முகம் காணும்போது
ஆஹா ஆஹா ஆனந்தமே
அம்மா உன்னை தரிசிக்கும்போது
ஆறாத துயரெல்லாம் ஆறிடுதே
வரும் துயரங்கள் எல்லாம் பறந்தோடி டுமே
அன்னை நீ இருந்தால் மகிழ்வோம் தினமே
ஆரோக்கிய தாயே ஆதாரம் நீயே
நாடிவரும் எங்களுக்கு ஆதரவும் நீயே
அம்மா உந்தன் புகழ் பாடும் போது
வாழ்நாள் எல்லாம் இனிதாகுமே
அம்மா உந்தன் மடி சாயும் போது
சுமை யாவும் சுகமாக மாறிடுதே
வருத்தும் பிணி எல்லாம் குணமாகிடுமே
அன்னை அருள் புரிந்தால் பெறுவோம் நலமே
தாயே மரியே வேண்டி வந்தோம் உமையே
கண்மணியாய் எங்களை காத்தருளும் நிதமே
amma amma arul nirai – ammaa ammaa arul nirai
ammaa ammaa arul nirai mari ammaa
anpaay thaettum maasatta mari ammaa
nalan palan pera vaennti
naanila makkal kooti
ninpaatham vanthom
ammaa mariyae mangaa oli vilakkae
ammaa unthan mukam kaanumpothu
aahaa aahaa aananthamae
ammaa unnai tharisikkumpothu
aaraatha thuyarellaam aariduthae
varum thuyarangal ellaam paranthoti dumae
annai nee irunthaal makilvom thinamae
aarokkiya thaayae aathaaram neeyae
naativarum engalukku aatharavum neeyae
ammaa unthan pukal paadum pothu
vaalnaal ellaam inithaakumae
ammaa unthan mati saayum pothu
sumai yaavum sukamaaka maariduthae
varuththum pinni ellaam kunamaakidumae
annai arul purinthaal peruvom nalamae
thaayae mariyae vaennti vanthom umaiyae
kannmanniyaay engalai kaaththarulum nithamae